முகப்பு
இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தில்லியில் கைது!

தில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி பற்றி..

Updated On : 30 மார்ச் 2026, 4:33 pm IST
கைது செய்யப்பட்ட ஷபீர் அகமது லோனே என்கிற காஷ்மீரி - ANI
பகிர்:

தில்லியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர் கைது.

தில்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு வேலை பார்த்ததாக சந்தேகத்திற்குரிய நபரை காசிப்பூர் பகுதியில் இன்று கைது செய்தனர்.

ஷபீர் அகமது லோனே என்கிற காஷ்மீரி எனப்படும் அந்த நபர் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஸ்லீப்பர் செல் உறுப்பினராக செயல்பட்டு தில்லியில் இந்தியாவுக்கு எதிரான போஸ்டர்களை பல்வேறு பகுதியில் ஒட்டியதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் புலனாய்வு சேவையகம் (ஐ.எஸ்.ஐ.) -ன் கீழ் இவர் இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்திய பணம், சிம்கார்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர்.

முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு ஏகே 47 ரைஃபில்கள் அடங்கிய பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் இந்த நபர் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 2018 வரை திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மேலும், இவருக்கு ஹஃபீஸ் சையது மற்றும் ஸகி-உர்-ரெஹ்மான் லக்வி போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாஃபர்பாத்தில் பயங்கரவாத பயிற்சி எடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

summary

Suspected LeT operative arrested in Delhi's Ghazipur: Police

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.