முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 1,913 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,913 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜூலை, 2021 at 7:26 PM
பகிர்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,913 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கரோனா பாதிப்புகள் நிலவரம் பற்றிய தரவுகள் மாநில சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக 1,913 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும் 2,489 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

Advertisement

இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,74,597 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,04,396 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 35,944 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 34,234 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.