முகப்பு
இந்தியா

தில்லியில் தொடரும் தடுப்பூசி பற்றாக்குறை

தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் பல அரசு தடுப்பூசி முகாம்கள் இன்று மூடப்பட்டுள்ளதாக தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் பல அரசு தடுப்பூசி முகாம்கள் இன்று மூடப்பட்டுள்ளதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருகிறது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் பல அரசு தடுப்பூசி முகாம்கள் இன்று மூடப்பட்டுள்ளதாக தில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சுட்டுரை பக்கத்தில், "தில்லியில் மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒன்றிரண்டு நாள்களுக்கு மட்டுமே மத்திய அரசு தடுப்பூசி வழங்குகிறது. பல நாள்களுக்கு தடுப்பூசி  முகாம்களை மூடி வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல நாள்களாகியும், நம் நாட்டின் தடுப்பூசி திட்டம் ஏன் தடுமாறுகிறது?" என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 21ஆம் தேதி, புதிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே தடுப்பூசி பற்றாக்குறை பிரச்னையை தில்லி அரசு முன்வைத்துவருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தில்லியில் தினசரி தடுப்பூசி செலுத்தும் விகிதிம் குறைந்துள்ளதாக அரசு தரப்பு தரவுகள் கூறுகின்றன.

முன்னதாக, சராசரியாக ஒரு நாளுக்கு 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்த நிலையில், நேற்று 36, 310 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →