முகப்பு
இந்தியா

சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 13 ஜூலை, 2021 at 4:58 PM
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால்
பகிர்:

சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்த நிலையில், தற்போது சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கரோனா நிலவரம் குறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில்  லவ் அகர்வால் பேசியதாவது,

Advertisement

மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதே சமயம், சில மாநிலங்களில் கரோனா எண்ணிக்கை குறைந்த போதிலும், சீராக குறைவதில்லை.

சட்டீஸ்கர், கேரளம், ஒடிசா, மகாராஷ்டிரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 11 மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்க மத்திய அரசின் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாம் மூன்றாம் அலை பற்றி பேசி வரும் நிலையில், அதன் தீவிரத்தன்மையையும், அதை தடுப்பதற்கான பொறுப்புகளையும் புரிந்து கொள்ளவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.