முகப்பு
இந்தியா

கேரளத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள்

கேரளத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த 'கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி' என்ற புதிய இயக்கத்தை அம்மாநில அரசு தொடங்க திட்டமிட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
பகிர்:

கேரளத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த 'கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி' என்ற புதிய இயக்கத்தை அம்மாநில அரசு தொடங்க திட்டமிட்டுள்ளது. 

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதுகுறித்து பேசியதாவது: 

அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம். பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக ஒவ்வொரு வார்டுகளில் உள்ள கர்ப்பிணிகளின் விவரங்களை சுகாதாரத்துறையினரால் அறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பதிவு செய்வார்கள். கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்த ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் ஒவ்வொரு வார்டில் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம். 

கர்ப்பிணிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மாவட்ட அளவில் சிறப்பு நாள்களில் நடத்தப்படும். மற்றவர்களிடம் இருந்து தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவும். கர்ப்பிணிகளுக்கு கரோனா பாதிப்பு வந்தால் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்' என்றார். 

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களும் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →