ராகுல் காந்தி | பிரசாந்த் கிஷோர் 
இந்தியா

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தில்லியில் சந்தித்துப் பேசி வருகிறார். 

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தில்லியில் சந்தித்துப் பேசினார். 

தில்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. 

ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஹரிஷ் ராவத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்களும் உடனிருந்தனர். 

முன்னதாக, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டுள்ளார். மேலும் சமீபத்தில் அவர் சரத் பவார், மம்தா பானர்ஜி, அமரீந்தர் சிங் ஆகியோரை சந்தித்திருந்த நிலையில் இன்று அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT