முகப்பு
இந்தியா

முதுநிலை மருத்துவப் படிப்பு: செப். 11-ல் நீட் தேர்வு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமது சுட்டுரையில் அமைச்சர் மாண்டவியா பதிவிட்டுள்ளதாவது, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று மாலை தொடங்கியது.

இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →