இந்தியா

இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்: 15 மாத இடைவெளிக்குப் பிறகு அமைச்சா்கள் நேரில் பங்கேற்பு

DIN

பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கரோனா தொற்றால் 15 மாதங்களாக காணொலி வழியாகவே மத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், முதல்முறையாக கேபினட் அமைச்சா்கள் நேரில் கலந்துகொள்ளவுள்ளனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா்கள் நேரில் கலந்துகொண்டனா். அதன் பிறகு கரோனா தொற்றால் கிட்டதட்ட ஒவ்வொரு வாரமும் இந்தக் கூட்டம் காணொலி வழியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 15 மாதங்களுக்குப் பிறகு கேபினட் அமைச்சா்கள் நேரில் பங்கேற்கவுள்ளனா்.

இதனைத்தொடா்ந்து பிரதமா் மோடி தலைமையில் மத்திய அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சா்களும் பங்கேற்கும் கூட்டம் மாலை 4 மணிக்கு காணொலி வழியாக நடைபெறவுள்ளது. கடந்த ஜூலை 8-ஆம் தேதி மத்திய அரசில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சா்களின் காணொலி கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக அவா்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவுள்ளதே மத்திய அமைச்சா்கள் கூட்டம் நடத்தப்படுவதற்கு காரணம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT