இந்தியா

கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு 23 ஆக உயர்வு!

DIN

கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது. 

ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளத்தில்பரவும் இந்த வைரஸால் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன. 

இந்நிலையில் கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று பாதிப்பு 21 ஆக இருந்த நிலையில் திருவனந்தபுரத்தில் 16 வயது சிறுமி ஒருவருக்கும் 38 வயதுடைய மருத்துவர் ஒருவருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். 

திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யும் வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT