இந்தியா

18-44 வயதுக்குட்பட்டோருக்கு அதிகபட்சமாக 39% தடுப்பூசி

DIN

நாட்டில் அதிகபட்சமாக 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 39 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

அதற்கு அடுத்தபடியாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு 34.5 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மத்திய சுகாதாரத் துறை போதிய தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதிகபட்சமாக தற்போது 39 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று 181 வது நாளாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதில் அதிகபட்சமாக 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 39 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 45-60 வயதுக்குட்பட்டவர்களுக்கு 34.5 சதவிகிதமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 26.5 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT