முகப்பு
இந்தியா

ம.பி.: ஜூலை 25 முதல் பள்ளிகள் திறப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25-ம் தேதி முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
சிவராஜ் சிங் செளஹான் (கோப்புப் படம்)
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25-ம் தேதி முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். 

கரோனா வழிகாட்டுகள் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 25-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →