இந்தியா

2022 - பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்பலாம்: மத்திய அரசு அறிவிப்பு

DIN

நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண்,  பத்மபூஷண்,  பத்மஸ்ரீ  விருதுகளுக்கான பரிந்துரைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

பத்ம விருதுகளுக்கான அரசு அதிகாரப்பூர்வ இணைய தளமான  https://padmaawards.gov.in -ல் இந்தப் பரிந்துரைகளை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

அறிவிக்கப்பட்ட இணையதளத்துக்குச் சென்று இணையவழியில் மட்டுமே பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்ப முடியும்.

பத்ம விருதுகளானது  கல்வி, அரசியல், இலக்கியம், விளையாட்டு, அறிவியல், பொதுப்பணி, சமூக சேவை போன்ற பல  துறைகளில்  சிறந்த  சாதனைகளைப் புரிந்தவர்களுக்காக வழங்கப்படுகின்றன. இவ்விருதுக்கு பல்வேறு துறைகளிலிருந்து யாரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம் எனவும் தனிநபர்  பரிந்துரைகளும் அனுமதிக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்விருதுகள் வரும் 2022 ஆம் ஆண்டு குடியரசு நாளில் வழங்கப்படும்.

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கு:

https://applypadma.mha.gov.in/(S(4dp2xqdwdqgbx214g51toaui))/publicsite/login.aspx

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT