இந்தியா

காவலரை துப்பாக்கியால் சுட்டுத் தப்பிய ஏடிஎம் கொள்ளையர்கள்

உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை துணை ஆய்வாளரைத் துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்களை, தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

DIN

உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை துணை ஆய்வாளரைத் துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்களை, தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆன்லா நகரில் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) காவல்துறை துணை ஆய்வாளர் பிரவீன் குமார் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏடிஎமம் வாசலில் ஒருவர் சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்திருக்கிறார். 

அவரை விசாரிக்கும்போது, ஏடிஎம் உள்ளே இருந்து இருவர் வெளியே வந்து, பிரவீன் குமாரை துப்பாக்கியால் சுட்டுத் தப்பி சென்றுள்ளனர். தற்போது பிரவீன் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரின் விசாரணையில் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திறந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது சிறப்புக் குழு  ஒன்றை அமைத்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT