இந்தியா

தில்லி கலவரம்: மத்திய அரசு பதில் அளிக்க கூடுதல் அவகாசம்

வட கிழக்கு தில்லி கலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

DIN

வட கிழக்கு தில்லி கலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்தாண்டு பிபர்வரி மாதம், வட கிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இரு குழுவினருக்கிடையே மோதல் வெடித்தது. அந்த கலவரத்தில் 53 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உண்மை கண்டறியும் குழுவை தில்லி சிறுபான்மை ஆணையம் அமைத்தது. பல கட்ட விசாரணைக்கு பிறகு, அறிக்கையானது ஜூன் 27ஆம் தேதி சமர்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சமர்பிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், டி.என். படேல், ஜோதி சிங் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது, உண்மை கண்டறியும் மனு குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியது.

முன்னதாக, இந்த மனு குறித்து பதில் அளிக்க தில்லி காவல்துறைக்கும் உண்மை கண்டறியும் குழுவுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. வன்முறை குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டிருந்தன. அதற்கு எதிராகவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வன்முறையில் பாதிக்கப்பட்ட மனுதாரரான தர்மேஷ் சர்மா, வெளியிடப்பட்ட அறிக்கைகள் யாவும் நீதிமன்றத்தையும் மக்களையும் குழப்பும் வகையில் அமைந்துள்ளது என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காட்டுப் பன்றியை சுட்டுக் கொன்ற வனத் துறை

நீதிமன்ற உத்தரவின்படி வீடுகளை இடிக்க முயற்சி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: தமிழகத்தில் அடுத்த வாரம் தொடக்கம்- தோ்தல் ஆணையம் தகவல்

SCROLL FOR NEXT