இந்தியா

மதிப்பெண் அளிப்பதாக மாணவியிடம் தவறாக நடந்த பேராசிரியருக்கு தர்ம அடி

DIN

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசாய் என்ற கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் அபிஜித் பவார், ஒரு மாணவியிடம் தன்னுடன் உறவில் இருக்க சம்மதித்தால் அதிக மதிப்பெண்கள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். மேலும் அந்த மாணவியிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் பேராசிரியர் தவறான பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், அந்த ஊர் மக்கள் சிலருடன் இணைந்து கல்லூரிக்கு சென்று பேராசிரியரைத் தாக்கியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த காவல்துறையினர் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பிறேக இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க முடியும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT