முன்னெப்போதும் இல்லாத வகையில் கரோனாவைக் கையாண்டுள்ள உ.பி. அரசு: பிரதமர் பாராட்டு
கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையை உத்தரப் பிரதேச அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாமுன்னெப்போதும் இல்லாத வகையில் கரோனாவைக் கையாண்டுள்ள உ.பி. அரசு: பிரதமர் பாராட்டு
கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையை உத்தரப் பிரதேச அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையை உத்தரப் பிரதேச அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாராணசிக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
இதன்பிறகு அவர் பேசியது:
"கரோனா இரண்டாம் அலையையும், அதன் பரவலையும் உத்தரப் பிரதேச அரசு கட்டுப்படுத்தியவிதம் முன்னெப்போதும் இல்லாதது. கரோனாவை எதிர்கொள்ள உத்தரப் பிரதேசம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மெச்சத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் இன்று சட்ட விதிகள் இருக்கின்றன. மாஃபியாக்கள் ராஜ்ஜியமும், பயங்கரவாதமும் ஒரு காலத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தன. தற்போது அவை சட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன."