உத்தரப் பிரதேசம் மாநிலம் பலியா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியின் புகைப்படத்தை தவறாக தனது முகநூலில் இளைஞர் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் மீது சிறுமியின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞரின் குடும்பத்தார், உருட்டுக்கட்டை மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த தாக்குதலில் 4 பெண்கள் உட்பட 10 பேர் கடுமையாகக் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் இருவர் மிகுந்த ஆபத்தான நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினர் 17 பேர் வழக்குப்பதிவு செய்து, தற்போது அதில் 7 பேரை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.