இந்தியா

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி வியாழக்கிழமை இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திகி, பிரபல பத்திரிக்கை ஒன்றில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்கள் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்க சென்ற குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

ஆப்கனின் கந்தகர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தலிபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தலிபான்களின் தாக்குதலில் நேற்று இரவு பலியானார்.

கடந்த 2018ஆம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர் டேனிஷ் சித்தி. தில்லி கலவரம், கரோனா இரண்டாம் அலையின்போது தில்லி மைதானத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டதை இவர் எடுத்த புகைப்படம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

சில நாள்களுக்கு முன்பு, தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு காணொலியை பதிவு செய்து தலிபான்களின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்துள்ளேன் என்று சித்திக் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT