இந்தியா

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவருக்கு கடும் கட்டுப்பாடுகள்..சீனா அதிரடி

DIN

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடை விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.

கரோனா வைரஸானது சீனாவில் பரவு தொடங்கி இருந்தாலும், கட்டுப்பாடுகளை மேற்கொண்டதன் மூலம் அந்நாடு அதனை கட்டுப்படுத்தியது. இருப்பினும், ஆசிய நாடுகளில் டெல்டா வகை கரோனா வேகமாக பரவிவரும் நிலையில், சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் நிலை நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதிக்குள், சுக்சியாங் நகர மக்கள் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லை எனில், மருத்துவமனைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது சீனா முழுவதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள், 64 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவதை சீனா இலக்காக கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெய்க்காரபட்டி குருவப்பா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,159 கோடி டாலராக உயா்வு

இந்திரா காந்தியிடம் பிரதமா் மோடி பாடம் கற்க வேண்டும்: பிரியங்கா காந்தி

பிகாரில் ‘நீட்’ வினாத்தாள் கசிவு: 13 போ் கைது

மத்திய ராஃபாவிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

SCROLL FOR NEXT