இந்தியா

தயாநிதி மாறனை வியப்பூட்டிய  பாஜக எம்.பி. மீண்டும் விமானம் ஓட்டி அசத்தல்

பாஜக எம்.பி.யும் விமானியுமான ராஜீவ் பிரதாப் ரூடி நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சென்ற விமானத்தை ஓட்டி அசத்தியுள்ளார்.

DIN


பாஜக எம்.பி.யும் விமானியுமான ராஜீவ் பிரதாப் ரூடி நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சென்ற விமானத்தை ஓட்டி அசத்தியுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தில்லியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றிருந்தார். அப்போது, பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடிதான் அவர் சென்ற விமானத்தை ஓட்டினார்.

சக நாடாளுமன்ற உறுப்பினரான ரூடி விமானம் ஓட்டிய அனுபவத்தை தயாநிதி மாறன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இது செய்திகளில் வெளியாகின.

இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு  உறுப்பினர்கள், பாஜக மூத்த தலைவர்கள் சென்ற பயணிகள் விமானத்தை ஓட்டி ரூடி மீண்டும் அசத்தியுள்ளார். இதுகுறித்து விடியோவை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

"இது ஒரு தனித்துவமான விமானம்" என்று சொல்லி அவர் பயணிகளை வரவேற்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே விமானப் போக்குவரத்து துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சென்ற விமானத்தை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஓட்டி செல்வது இது முதல்முறை என அவர் கூற, பயணிகள் அதனைக் கைதட்டி வரவேற்கின்றனர்.

விமானப் போக்குவரத்து துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் வெங்கடேஷ், பிகார் முன்னாள் முதல்வர் சுஷில் குமார் மோடி, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத், முன்னாள் தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

தனது சக விமானியுடன், விமானத்தில் இருந்த திவாரியின் ஆறு மாதக் குழந்தை சான்விகாவையும் அவர் 'இளம் பயணி' எனக் குறிப்பிட்டு பயணிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT