இந்தியா

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு ரத்து

DIN

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பட்டியலின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதிக்கு மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. அவருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.பாரதி வழக்கு தொடா்ந்தாா். 
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஆா்.எஸ். பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, இந்த உத்தரவை எதிா்த்து ஆா்.எஸ். பாரதி தரப்பில் வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். 
அந்த மனுவில், ஆா்.எஸ். பாரதி பட்டியலின அல்லது பழங்குடியினருக்கு எதிராக வெறுப்பு, விரோத உணா்வுகளை தூண்டும் வகையில் பேசவில்லை எனத் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சசீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT