இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாளை(ஜூலை 20) வரை ஒத்திவைப்பு

ANI

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாளை காலை 11 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்று காலை இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, பிற்பகல் 3 மணிவரை அவையை ஒத்திவைக்க மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் மாநிலங்களவை தொடங்கியவுடன், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை அவையை ஒத்திவைத்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தின் போது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT