இந்தியா

ராம்நாத் கோவிந்துக்கு மதுரையைப் பற்றிய புத்தகத்தை பரிசளித்த ஸ்டாலின்

DIN

புது தில்லி: புது தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.

அப்போது, குடியரசுத் தலைவருக்கு மதுரையைப் பற்றி மனோகர் தேவதாஸின் நூலான 'தி மல்டிபிள் ஃபேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை' என்ற நூலினை பரிசளித்தார்.  
புது தில்லி சென்றிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை அவரின் மாளிகையில் இன்று சந்தித்தார். குடியரசுத் தலைவரை முதல்வரான பிறகு மு.க. ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறை.

இந்த சந்திப்பின் போது, தமிழக சட்டப்பேரவையின் நுறாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்ததையடுத்து, அவரும் விழாவில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனான சந்திப்பின்போது  மனோகர் தேவதாஸின்  ஓவியத்துடன் எழுதப்பட்ட  'மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை' (Multiple Facets of My Madurai)  ​என்ற நூலையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மனோகர் தேவதாஸ்.. எழுத்தாளராகவும், ஓவியராகவும் புகழ்பெற்றவர். 1936ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருக்கு 2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில், மதுரையைப் பற்றிய தகவல்கள் அழகிய ஓவியங்களுடன் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

இவர் தி கிரீன் வெல்ஸ் இயர்ஸ், மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, எனது மதுரை நினைவுகள், நிறங்களின் மொழி, கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள், தைரியத்துக்கு ஒரு கவிதை, பட்டாம்பூச்சியும் மஹிமாவும் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவர் வரைந்த கலைநயமிக்க மதுரை கோயில்கள் மற்றும் புராதான கட்டடங்களின் கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது மிகவும் சிறப்பாகும்.

மதுரையைப் பற்றிய புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்திருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அதில், மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்? மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT