முகப்பு
இந்தியா

ஜூலை 27-ல் இந்தியா வருகிறார் ஆப்கன் ராணுவத் தளபதி

ஆப்கானிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய் ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 20 ஜூலை, 2021 at 12:26 PM
ஆப்கானிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய்(படம்: டிவிட்டர்)
பகிர்:

ஆப்கானிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய் ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், ஆப்கன் தளபதியின் வருகை முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரு மாதங்களாக ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்க படையினர் விரைவாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கன் நாட்டை கைப்பற்றும் நடவடிக்கையை தலிபான்கள் வேகப்படுத்தியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், இந்தியா வருகை தரும் ஆப்கன் ராணுவத் தளபதி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து தலிபான்களுக்கு எதிரான சண்டையில் ஆப்கன் அரசுக்கு உதவி கோர வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.