முகப்பு
பொது முடக்கத்தில் விதிமீறல் - தாணே காவலர்கள் மீது நடவடிக்கை
இந்தியா

பொது முடக்கத்தில் விதிமீறல் - தாணே காவலர்கள் மீது நடவடிக்கை

கரோனா நோய்த்  தொற்று  காலத்தில் அரசு  வழிகாட்டு நெறிமுறைகளின் படி   நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத்   திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது .

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பொது முடக்கத்தில் விதிமீறல் - தாணே காவலர்கள் மீது நடவடிக்கை
பகிர்:

தாணே : கரோனா நோய்த்  தொற்று  காலத்தில் அரசு  வழிகாட்டு நெறிமுறைகளின் படி   நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத்   திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில்  மராத்தி செய்தித் தொலைக்காட்சி  ஒன்றில் வெளியான காணொலி  மகாராஷ்டிரத்தில் வைரலாகி வருகிறது. தாணேவின் நௌபடா, வர்தக்  பகுதியில்   கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடத்தில்  செயல்பட்ட மதுபானக்  கூடங்கள் மற்றும் கேளிக்கைக்  கூடங்களில் பொது மக்கள் கூடி  எந்த நோய்க் கட்டுப்பாடு நெறிமுறைகளும் இல்லாமல் கொண்டாட்டத்தில் ஈடுபடும் அந்தக்   காணொலி  வெளியாகி பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. காவல்துறையின் பொறுப்பின்மையால் இது தொடர்ந்து நடந்துவருகிறது என அப்பகுதிவாசிகள்  தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழத்தொடங்கியது. 

இதன் காரணமாக மாநில உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பட்டில் இதுபற்றி விசாரிக்க காவல்துறை  தலைமை இயக்குனரிடம் தெரிவித்திருந்தார்.  விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்த பின்  மதுபானக்  கூடங்கள் அமைந்திருந்த பகுதிகளின் ஆய்வாளர்களான அணில் வான்கடே (நௌபடா) மற்றும் சஞ்சய் கெய்க்வாட் (வர்தக் ) இருவரையும்  பணி இடைநீக்கம் செய்தும் , உதவிக் காவல் கண்காணிப்பாளர்களான  நீடா படாவி ( நௌபடா பகுதி )மற்றும் பங்கஜ் ஷிரசாத் (வர்தக் பகுதி)   இருவரையும் காவல் கண்காணிப்பு அறைக்கு  பணியிடமாற்றம் செய்தும் உத்தரவைப்  பிறப்பித்தார்.

மேலும் தாணே  காவல்துறை கண்காணிப்பாளர் ஜெய் ஜீத் சிங் தடையை மீறிச்  செயல்பட்ட கேளிக்கை மற்றும் மதுபானக்  கூடங்களின் உரிமத்தையும்   ரத்து செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →