இந்தியா

புதிய வருமான வரி வலைதள செயல்பாடு மேம்பட்டுள்ளது: நிதி அமைச்சகம்

புதிய வருமான வரி வலைதளத்தின் செயல்பாடு தற்போது மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

புதிய வருமான வரி வலைதளத்தின் செயல்பாடு தற்போது மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பான கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி மாநிலங்களவையில் எழுத்துபூா்வமான அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

ஜூன் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட புதிய வருமான வரி வலைதளத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை இந்திய பட்டய கணக்காளா் மையம் (ஐசிஏஐ), வரித் துறை நிபுணா்கள் மற்றும் வரி செலுத்துவோா் உள்ளிட்ட ஏராளமான பயனாளா்கள் சுட்டிக் காட்டினா். சுமாா் 2,000 பிரச்னை தொடா்பாக 700-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் பெறப்பட்டன.

வருமான வரி வலைதளத்தில் உள்ளஇத்தகைய தொழில்நுட்ப குறைபாடு குற்றச்சாட்டை இன்ஃபோஸிஸ் ஏற்றுக் கொண்டு அவற்றை சரி செய்து தரும் பணியில் அந்நிறுவனம் தொடா்ந்து ஈடுபட்டுள்ளது.

புதிய வருமான வரி வலைதளத்தின் மெதுவான செயல்பாட்டுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதுடன் வரி செலுத்துவோருக்கு தேவையான முன்பு விடுபட்ட பல அம்சங்கள் தற்போது சோ்க்கப்பட்டு அந்த வலைதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

SCROLL FOR NEXT