இந்தியா

கேரளத்தில் மேலும் ஒருவருக்கு ஜிகா பாதிப்பு

DIN


கேரளத்தில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் ஜிகா பரவுகிறது. காய்ச்சல், மூட்டு வலி, உடலில் தடிப்பு உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதுதொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேரள அரசு ஏற்கெனவே மக்களை அறிவுறுத்தியுள்ளது. எனினும், கடந்த சில நாள்களாக அங்கு ஜிகா பாதிப்பு உள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றி வீணா ஜார்ஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

"கேரளத்தில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT