இந்தியா

நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் இன்று மதியம் 2 மணிக்கு கூடுகின்றன

ANI

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

கரோனா தடுப்பூசி, பரவல் குறித்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறுவது குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்து கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் கூடவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று காலை கூடிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், இன்றைய கூட்டத்தின் இரு அவைகளிலும், பெகாசஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT