கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: பாதித்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு 
இந்தியா

கேரளத்தில் ஜிகா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு

கேரளத்தில் மேலும் மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

DIN

கேரளத்தில் மேலும் மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் ஜிகா பரவுகிறது. காய்ச்சல், மூட்டு வலி, உடலில் தடிப்பு உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதுதொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேரள அரசு ஏற்கெனவே மக்களை அறிவுறுத்தியுள்ளது. எனினும், கடந்த சில நாள்களாக அங்கு ஜிகா பாதிப்பு உள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றி வீணா ஜார்ஜ் புதன்கிழமை தெரிவித்தது:

"கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT