முகப்பு
வருமான வரித்துறை சோதனை
இந்தியா

பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களில் ஐடி சோதனை

பிரபல செய்தி நிறுவனமான டைனிக் பாஸ்கருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

இந்தியா

பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகங்களில் ஐடி சோதனை

பிரபல செய்தி நிறுவனமான டைனிக் பாஸ்கருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
வருமான வரித்துறை சோதனை
பகிர்:

பிரபல செய்தி நிறுவனமான டைனிக் பாஸ்கருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

நாட்டின் பிரபல செய்தி நிறுவனமான டைனிக் பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தினர். டைனிக் பாஸ்கரின் உரிமையாளர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தில்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா அகிய மாநிலங்களில் உள்ள டைனிக் பாஸ்கர் அலுவலங்களிலும் குழுமத்தின் உரிமையாளரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டைனிக் பாஸ்கரின் செய்தி தொலைக்காட்சியான பாரத் சமாச்சாரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசு கரோனாவை கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்து பாரத் சமாச்சார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.

கரோனா விவகாரத்தில் அரசை விமர்சித்ததன் விளைவாக சோதனை நடத்தப்பட்டதாக எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர். இது ஜனநாயகத்தை அடக்கும் முயற்சி என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டைனிக் பாஸ்கர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திருப்பது ஊடகத்தின் குரலை நசுக்கும் முயற்சி என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவியதாக டைனிக் பாஸ்கர் நாளிதழில் செய்தி வெளியானது. கங்கை ஆற்றில் கிடந்த சடலங்கள் குறித்து வெளியான செய்தி உலகின் புகழ்பெற்ற நாளிதழ்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →