ராஜஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள
இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி , இன்று காலை 7.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பிகானிர் பகுதியில் 110 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் நேற்றும் அங்கு நிலநடுக்கம் வந்து ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதன் கிழமை மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.