இந்தியா

அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.

DIN


மத்திய அமைச்சர் வைத்திருந்த பெகாசஸ் விவகாரம் குறித்த அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கிழித்தெறிந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெகாசஸ், டைனிக் பாஸ்கர் செய்தி நிறவனத்தில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனை ஆகிய விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச முன்வந்தார்.

அப்போது, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் அமைச்சரிடமிருந்த அறிக்கையைப் பிடுங்கி கிழித்தெறிந்தார்.

இதனால், அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் வெடித்தது.

பின்னர், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT