காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
வடக்கு காஷ்மீரின் சோபோர் பகுதியில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த தகவலை உறுதிசெய்தனர் .
வடக்கு காஷ்மீரின் சோபோர் பகுதியில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த தகவலை உறுதிசெய்தனர் .
பின் காவல் மற்றும் பாதுகாப்புப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் .
இதுகுறித்து காவல்துறைத் தலைவர் விஜயகுமார் அளித்த தகவலின் படி , ' தொடர்ந்து வடக்கு காஷ்மீரில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வந்த பயாஸ் வார் என்பவனும் இந்தத் தாக்குதலில் உரிழந்ததாகவும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அறையில் சில துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது ' எனக் கூறிய பின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.