இந்தியா

​கண்ணிவெடி தாக்குதலில் ராணுவ வீரா் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதியில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாட்டி செக்டாரில் கமல்தேவ் வைத்யா(27) என்ற வீரா் காவல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததால், அது வெடித்துச் சிதறியது. அதில், பலத்த காயமைடந்த கமல்தேவ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிரிழந்தாா் என்றாா் அந்த ராணுவ செய்தித் தொடா்பாளா்.

ஹிமாசல பிரதேச மாநிலம், ஹமீா்பூா் மாவட்டத்தில் உள்ள குமா்வின் கிராமத்தைச் சோ்ந்த கமல்தேவ் தனது தாயாருடன் வசித்து வந்தாா். கமல்தேவ் இறந்த செய்தியை அறிந்து, அவருடைய வீட்டருகே பொதுமக்கள் திரண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். கமல்தேவின் மறைவுக்கு ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT