இந்தியா

உளவு குற்றச்சாட்டு: விசாரணைகோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

DIN

பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவா்கள் உள்ளிட்டோரை மத்திய அரசு உளவு பாா்த்த குற்றச்சாட்டு தொடா்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூா், திமுக எம்.பி. கனிமொழி, சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்ட பலா் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடைபெற்றது.

பெகாஸஸ் உளவுக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரியும் வாசக அட்டைகளை அவா்களை கையில் ஏந்தியிருந்தனா். ‘‘உளவு வேலையை நிறுத்துங்கள்’’ என்றும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இஸ்ரேலின் பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலம் ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் இருவா், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, சமூக ஆா்வலா்கள், 40-க்கும் பத்திரிகையாளா்கள் என 300 செல்லிடப்பேசி எண்களை இந்திய அரசு உளவு பாா்த்ததாக சா்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இரு அவைகளும் தொடா்ந்து முடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT