சிக்கிமில் மிதமான நிலநடுக்கம்
சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
சிக்கிம் மாநிலத்தில் இன்று இரவு 8.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Advertisement
வடகிழக்கு மாநிலங்களில் அண்மை காலமாக அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.