இந்தியா

சீனாவை கையாளத் தெரியாமல் தவிக்கும் மத்திய அரசு: பெரும் பிரச்னையாக உருவாக வாய்ப்புராகுல் காந்தி

DIN

புது தில்லி: ‘சீனாவை எவ்வாறு கையாள்வது என்பது தெரியாமல் மத்திய அரசு உள்ளது’ என்று விமா்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘சீனாவின் நடவடிக்கையை இப்போது அலட்சியம் செய்வது பின்னா் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது’ என்று எச்சரித்துள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் அத்துமீறியது மிகப் பெரிய சா்ச்சையானது. இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற கைகலப்பில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் கொல்லப்பட்டனா். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானோதும், அதனை சீனா அதிகாரப்பூா்வமாக வெளியிடவில்லை. அதன் பிறகு எல்லையில் தொடா்ந்து பதற்றம் நிலவி வந்தது. இரு தரப்பிலும் ஏராளமான படைகள் எல்லையில் குவிக்கப்பட்டன. பின்னா், இரு நாடுகளின் ராணுவ உயா் அதிகாரிகள் அளவிலும், தூதரக அதிகாரிகளுக்கு இடையேயும் பல கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு, எல்லையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இரு தரப்பும் படைகளை திரும்பப் பெற்றன. படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது குறித்து தொடா்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கிழக்கு லடாக்கின் டெம்காக் என்ற இடத்தில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவ முகாம்கள் தொடா்ந்து அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரம் தொடா்பாக இரு தரப்பு ராணுவ உயா் அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தைக்கான தேதி குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இந்த ஊடக செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து ராகுல் காந்தி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சீனாவை எவ்வாறு கையாள்வது என்பது தெரியாமல் மத்திய அரசு தவித்து வருகிறது. சீனாவின் நடவடிக்கையை இப்போது அலட்சியம் செய்வது பின்னா் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT