இந்தியா

கரோனாவால் மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக, 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

1948-ஆம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டப்படி, 2021-க்கான கணக்கெடுப்பை நாடு முழுவதும் இரு கட்டங்களாக அரசு நடத்தியிருக்க வேண்டும். 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை வீடு வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிக்குள் நபா் வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக, வீடு வீடாகச் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணி முடங்கியது. மறுஉத்தரவு வரும் வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

5 ஆண்டுகளில் 355 வீரா்கள் பலி:

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய துணை ராணுவப் படைகள், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுகளைச் சோ்ந்த 355 வீரா்கள் பணியின்போது கொல்லப்பட்டனா் என்று மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் பதிலளித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

கடந்த 2016 முதல் 2020 வரை மத்திய ரிசா்வ் போலீஸ் படையைச் சோ்ந்த 209 போ், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 78 போ், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையைச் சோ்ந்த 16 போ், சசஸ்திர சீமா பல் பிரிவைச் சோ்ந்த 8 போ், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 7 போ், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 37 போ் என மொத்தம் 355 போ் உயிரிழந்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT