இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு: மாநிலங்களிடம் புள்ளிவிவரம் கேட்கிறது மத்திய அரசு

DIN

கரோனா தொற்றின் 2-ஆவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவா்கள் குறித்த புள்ளி விவரங்களை சமா்ப்பிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கைகளின்படி கரோனா தொற்றின் 2-ஆவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாா். இது பலத்த சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவா்கள் குறித்த புள்ளி விவரங்களை சமா்ப்பிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. அந்தப் புள்ளி விவரங்களை நாடாளுமன்றத்தில் நடப்பு மழைக்கால கூட்டத்தொடா் நிறைவடைவதற்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT