உத்தரகண்டில் ஆக. 1 முதல் பள்ளிகள் திறப்பு 
இந்தியா

உத்தரகண்டில் ஆக. 1 முதல் பள்ளிகள் திறப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. 

ANI

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வந்தன.

பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உத்தரகண்டில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பிகார், ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT