இந்தியா

கர்நாடக முதல்வர் யார்?: எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்

DIN

கர்நாடக முதல்வரை தேர்வு செய்வது தொடர்பான எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தில் பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

இதையடுத்து அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இதில் கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதனடிப்படையில் முதல்வரை அவர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆலோசனையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த எடியூரப்பாவும் கலந்துகொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT