கோப்புப்படம் 
இந்தியா

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - ஆண்டனி பிளிங்கன்

இந்திய, அமெரிக்க உறவின் மையப்புள்ளியாக ஜனநாயகம் திகழ்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய, அமெரிக்க உறவின் மையப்புள்ளியாக ஜனநாயகம் திகழ்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவர் ஆலோசனை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுருந்தது.

இந்நிலையில், ஆண்டனி பிளிங்கன் திட்டமிட்டபடி இன்று ஜெய்சங்கரை சந்தித்து  பேசினார். ஆப்கானிஸ்தான், பருவநிலை மாற்றம், கரோனா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "சுதந்திரம், சமத்துவம் ஆகிய விழுமியங்கள் இரண்டு நாடுகளுக்கும் மிக முக்கியம். ஆனால், இரு நாடுகளும் அதற்காக போதுமானவற்றை செய்யவில்லை.

வியூக, பொருளாதார ரீதியான உறவுகளை தாண்டி
ஜனநாயகமே இரண்டு நாட்டு உறவுக்கு மையப்புள்ளியாக திகழ்கிறது. எனவே, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்த இரண்டு மிகப் பெரிய ஜனநாயக நாடுகளும் பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

அமெரிக்கர்கள் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் போற்றுகின்றனர். அந்த வழியில்தான், இந்தியாவையும் பார்க்கிறோம். சுதந்திரமாக யோசிக்கும் குடிமக்களால்தான் இந்திய ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. 

அரசியலமைப்பு, மத சுதந்திரத்திற்கான உரிமை ஆகிய விழுமியங்களால் இந்திய அமெரிக்க உறவு பிணைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சில சமயங்களில் அதற்கான பாதை மிகக் கடினமாக இருக்கும். ஜனநாயகத்தின் வலிமை என்பது அதை தழுவி கொள்வதே ஆகும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT