கோப்புப்படம் 
இந்தியா

குற்றச் செயல்கள் செய்த மக்கள் பிரிநிதிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க விலக்கு அளிக்கப்படவில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து

ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் சட்டப்பேரவையில் பொருள்கள், நாற்காளிகள் ஆகியவற்றை சேதப்படுத்துவது சரியா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் சட்டப்பேரவையில் பொருள்கள், நாற்காளிகள் ஆகியவற்றை சேதப்படுத்துவது சரியா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, கேரள சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அன்றைய எதிர்கட்சி உறுப்பினர்களாக இருந்த வி. சிவன்குட்டி, கே.டி. ஜலீல் உள்ளிட்டோர் நாற்காலிகள், மைக்ரோன்போன்கள், கணினி ஆகியவற்றை சேதப்படுத்தினர். 

இதற்கு எதிராக இடது ஜனநாயக முன்னணி உறுப்பினர்களின் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை திரும்பபெறுவசாக இடது ஜனநாயக முன்னணி அரசு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ஆனால், உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இடது ஜனநாயக முன்னணி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று (புதன்கிழமை) விசாரித்த டி.ஓய். சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு, "பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் கல்வி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி, முன்னாள் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

குற்றச் செயல்கள் செய்த மக்கள் பிரிநிதிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க விலக்கு அளிக்கப்படவில்லை. இதில் மக்கள் பிரிதிநிதிகள் விலக்கு கேட்பது இந்தியா வாக்காளர்களுக்கு செய்யும் துரோகமாகும். எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். 

பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல. கேரள அரசின் வாதத்தில் நியாயம் இல்லை. ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் சட்டப்பேரவையில் பொருள்கள், நாற்காளிகள் ஆகியவற்றை சேதப்படுத்துவது சரியா? உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இதன்மூலம் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்" என தெரிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT