முகப்பு
இந்தியா

மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை (ஜூலை 29) காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
பகிர்:

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை (ஜூலை 29) காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு அமளிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. பெகாஸஸ் விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கூடிய மக்களவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் மற்றும் பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாளை (ஜூலை 29) வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →