இந்தியா

சர்வதேச புலிகள் தினம் : கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

DIN

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார் .

2010-ம் ஆண்டு ரஷ்யாவின்  நடைபெற்ற மாநாட்டில் ஜூலை 29-ம் தேதியை சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது . புலிகளைப் பாதுகாக்கவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘‘ உலகளவில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட புலிகள் வாழும் நம்நாட்டில் அதன் பாதுகாப்பை வலியுறுத்தும் கானுயிர் ஆர்வலர்களுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் வனத்தில் வாழும் புலியுடனான நட்பான சூழலையும்,அமைப்புகளையும்  வளர்ப்பதற்குமான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம் " என மோடி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் மொத்தம்  18 மாநிலங்களில் 51 புலி சரணாலயங்கள் உள்ளன. 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் தொகை கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

புலிகளின் நலனுக்காக  நாட்டின் பிரபலங்கள் குரல் கொடுத்த பின் புலிகள்  மீதான தாக்குதல்களும், கவனிப்பு இல்லாத போக்கும் குறைந்திருக்கிறது .
 
தற்போது இந்த 51 புலிகள் சரணாலயத்திலிருந்து 14 சரணாலயங்கள் உலகளவில் அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது. புலிகளுக்கு  சிறப்பான வனப்பாதுகாப்பு மற்றும்  சூழலும் இருப்பதால் இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT