எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு 
இந்தியா

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்தார்.

ANI

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தார்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 8வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அவை ஒத்திவைக்கப்பட்டவுடன் இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற கூட்டத்தை அமைதியாக நடத்தவும் மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் தரப்பிலிருந்து பெகாஸஸ் பிரச்சினை, பணவீக்கம் மற்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் 9: தீபக்கை நேரலையில் வரைந்து அசத்திய கமருதீன்!

எதிர்பாராத கிளைமேக்ஸ்! மெளனம் பேசியதே தொடர் நிறைவு!

SCROLL FOR NEXT