ஊடகங்கள்  மீது ரூ.25 கோடி  நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த ஷில்பா ஷெட்டி 
இந்தியா

ஊடகங்கள்  மீது ரூ.25 கோடி  நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

DIN

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 

இந்த வழக்கின் தொடர்ச்சியாக ராஜ் குந்த்ராவின் நண்பர்கள் மற்றும் மனைவி ஷில்பா ஷெட்டி ஆகியோரை விசாரணை செய்தனர். இத்தனை பெரிய வழக்கில் ஷில்பா ஷெட்டியின் தொடர்புகள் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிற கோணத்தில் விசாரணை செய்து வந்த அதிகாரிகரிகளிடம் நேற்று ஷில்பா  கதறி அழுததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது விசாரணை வளையத்திலிருந்து ஷில்பா  சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தன் கணவர் ராஜ்குந்த்ராவை தவறாக தகவலைப்  பதிவு  செய்ததற்காக 29 ஊடகங்கள் மீதும்  அதில் பணிபுரியும் ஊழியர்களின் மீதும் அவதூறு  வழக்கு ஒன்றை  தொடர்ந்து இருக்கிறார் .

மனுவில் தவறான செய்திகளை வெளியிட்டு என்னை காயப்படுத்தியதற்கு சில ஊடக நிறுவனங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், அனைத்து அவதூறான செய்திகளையும்  நீக்க வேண்டும் மற்றும் ரூ .25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில்  ஷில்பா கோரியுள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவ வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்?

வங்கியை முற்றுகையிட்ட மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள்

காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் எஸ்ஐஆா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிழற்குடைக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் மனு

SCROLL FOR NEXT