இந்தியா

எதிர்க்கட்சிகளின் அமளியால் 9வது நாளாக முடங்கியது மக்களவை

DIN

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்வதால் இன்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிகளுக்கு இடையே காப்பீட்டு திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இதன்பின், ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 11 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார். 

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT