தில்லி : கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நிழல் உலகத் தாதா சோட்டா ராஜன் உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . தற்போது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் திரும்ப திகார் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்திய புலனாய்வுத் துறையின் கைகளுக்கு பிடிபடாமல் மும்பையை ஆட்டிப் படைத்த தாதாக்களில் ஒருவரான சோட்டா ராஜன் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
60 க்கும் மேற்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாக பலத்த பாதுகாப்பில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.