இந்தியா

மகாராஷ்டிரம்: 11 முறை எம்எல்ஏவாக பதவிவகித்தவர் மரணம்

மகாராஷ்டிரத்தில் 11 முறை எம்எல்ஏவாக பதவிவகித்த கண்பத்ராவ் தேஷ்முக் இன்று காலமானார்.  

DIN

மகாராஷ்டிரத்தில் 11 முறை எம்எல்ஏவாக பதவிவகித்த கண்பத்ராவ் தேஷ்முக் இன்று காலமானார். 

மகாராஷ்டிர மாநிலம் விவசாயி மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் மூத்த தலைவர் கண்பத்ராவ் தேஷ்முக்(94). இவர் வயது முதிர்வு காணரமாக சோலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அவர் காலமானார். அவரது இறுதி சடங்குகள் சங்கோலாவில் நடைபெறும். தேஷ்முக் மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மறைந்த தேஷ்முக் 11 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கண்பத்ராவ் தேஷ்முக் மிகவும் எளிமையானவர். தனது வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு வெள்ளை நிற ஆடையை மட்டுமே பயன்படுத்தி வந்த அவர் அரசுப் போக்குவரத்தில் பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்துகளில் மாநிலம் முழுவதும் பயணம் செய்த ஒரே எம்.எல்.ஏ. தேஷ்முக் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாயும் ஒளி நீ... ராஷி சிங்!

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

காதல் இதயம்... தாரணி ஹெப்சிபா!

பொம்மைகளும், அதன் பாரம்பரியமும்...

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

SCROLL FOR NEXT